பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்டம் வ.கீரனூர் கிராமத்தில் கொரோனாவல் தனது தந்தையை இழந்து வறுமையில் வாடும் சுவாதி என்ற மாணவியின் குடும்பத்திற்கும்,
புஜங்கராயநல்லூர் கிராமத்தில் கொரோனாவால் தனது தாயை இழந்து வறுமையில் வாடும் வினோத் என்ற மாணவனின் குடும்பத்திற்கும் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்களை குன்னம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.ரவீந்திரன் அவர்கள் வழங்கியும் மேலும் ஏதேனும் உதவி வேண்டுமானால் எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளலாம் என அன்பு வேண்டுகோளும் விடுத்துள்ளார்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை