சென்னை: கொரானா முடியும்வரை காவல்துறையினருக்கு பொது இடமாறுதல் இல்லை தமிழகத்தில் கொரானா அதிகரிக்கும் நிலையில் போலீசாரின் நலன் கருதி அவர்களுக்கு பொது இடமாறுதல் வழங்க வேண்டாமென டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
கொரானா நாளுக்கு நாள் அதிகரிக்கிறது, ஊரடங்கி பாதுகாப்பு பணியில் உள்ள போலீசார் பலர் தொற்றுக்கு ஆளாகின்றனர். இதுவரை 1550க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் ஒரு காவல் உதவி ஆய்வாளர், மதுரை மதுரையில் காவல் உதவி ஆய்வாளர், விருதுநகரில் தலைமைக் காவலர் உள்ளிட்டோர் இழந்துள்ளனர்.
இதற்கிடையே ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளாக பணிபுரிபவர்கள், வேறு இடத்திற்கு மாற்றப்படுவது, வழக்கம். தற்போதைய சூழ்நிலையில் இடம் மாற்றினால், நோய்த்தொற்றுக்கு போலீசார் காவல் துறையினர் ஆளாக நேரிடும்.
இதை கருத்தில் கொண்டு பொது இடமாறுதல் செய்ய வேண்டாம் என ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், காவல் துறை இயக்குனர் ஜே.கே திரிபாதி,IPS உத்தரவிட்டுள்ளார். குடும்ப சூழ்நிலை மருத்துவம் உள்ளிட்ட காரணங்களுக்காக காவல்துறையினர் இடமாற்ற எந்தத் தடையும் இல்லை என அறிவுறுத்தியுள்ளார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்
வண்ணாரப்பேட்டை