சென்னை: பத்மநாபன் (54) Sl 34964 (1988 Batch) T3 கொரட்டூர் காவல் நிலையத்திலிருந்து அயல் பணியாக (OD Duty) T11 திருநின்றவூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தவருக்கு கடந்த 05.06.21ம் தேதி சளி மற்றும் காய்ச்சல் இருந்ததால் பழைய ஆணையாளர் அலுவலகத்தில் எடுக்கப்பட்ட கொரானா தொற்று பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டு ஓமந்தூரார் அரசினர் மருத்துவமனையில் சிகிச்சை முடித்து கடந்த 19.06.2021 முதல் வீட்டு கண்காணிப்பில் இருந்து வந்தவருக்கு 26.06.21ம் தேதி மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்படவே ஓமந்தூரார் அரசினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக 28.06.21ம் தேதி ராஜீவ்காந்தி அரசினர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று 01.07.21ம் தேதி 14.45 மணியளவில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.