இராணிப்பேட்டை: கொரானா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க அரசு அறிவித்த 144 ஊரடங்கு உத்தரவை மீறி, வெளியில் வரும் பொது மக்களை எச்சரிக்கை செய்யவும், கொரானா வைரஸ் தொற்று குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் அரக்கோணம் நகரில் முக்கிய சாலைகளில் அரக்கோணம் நகர காவல்துறை சார்பாக அரக்கோணம் புதிய பேருந்து நிலையம் மற்றும் SR கேட் பகுதியில் சாலையில் கொரானா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஓவியம் வரைந்து பொது மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சி அரக்கோணம் நகர காவல் ஆய்வாளர் திரு.முத்துராமலிங்கம் அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார். அப்போது பொது மக்களிடம் கொரானா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்றும் பாதுகாப்பு முறைமைகள் குறித்து விளக்கம் அளித்தார். மேலும் அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவுக்கு கட்டுப்பட்டு காவல்துறைக்கு ஒத்துழைப்பு தாருங்கள் என கேட்டுக் கொண்டார்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்
நன்றி :
திரு. வீரா ஜனா