கடலூர் : கடலூர் மாவட்டம் தற்காலிக காவலர் பயிற்சிப் பள்ளியில் 133 பெண் பயிற்சி காவலர்கள் கடந்த 4.5.2020 ஆம் தேதி முதல் பயிற்சி பெற்று வந்த நிலையில் 11 .5. 2020 ஆம் தேதி பயிற்சி அளித்த உதவி ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர், இரண்டு தலைமை காவலர்கள், 10 பெண் பயிற்சி காவலர்கள் மொத்தம் 14 காவல்துறையினர் நோய் தொற்று உறுதியானதால் இவர்கள் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை முடிந்து இன்று 21. 5 .2020 ஆம் தேதி உதவி ஆய்வாளர் உட்பட 13 பேர் காவல் வாகனம் மூலம் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வந்தவர்களை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. M. ஸ்ரீ அபிநவ் IPS அவர்கள் பூங்கொத்து கொடுத்தும், பழ கூடைகள் , கையுறை, முககவசம்,கிருமிநாசினி ஆகிய அனைத்தும் வழங்கி சிறப்பிக்க பட்டார்கள்.இந்நிகழ்ச்சிமாவட்ட காவல் அலுவலகம் முகப்பிலிருந்து காவல்துறையினரின் வாத்தியக்குழுவினர், வாத்தியம் இசைக்க, பயிற்சி காவலர்கள், மற்றும் காவலர்கள் மலர்தூவி ,கைதட்டி காவல்துறையினரை வரவேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு R. பாண்டியன் ,துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சுந்தரம், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் சுரேஷ் கண்ணன், காவல் ஆய்வாளர்கள் ஈஸ்வரி, விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.சதீஸ் குமார்