தஞ்சை : கொரோனா 2 ம் அலை பரவாமல் தடுத்திட வணிக நிறுவனங்கள், ஜவுளிக் கடைகாரர்கள் முகக் கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக முகக் கவசங்களை வழங்கிட வேண்டும் தீபாவளி கூட்ட நெரிசலில் கொரோனா பரவலை தடுத்திட விழிப்புணர்வு பேரணியை துவக்கிவைத்த தஞ்சை மாவட்ட ஆட்சியர், தஞ்சையில் இன்று மாவட்ட நிர்வாகம் , மாநகராட்சி, சுகாதாரத்துறை அலுவலர்கள் பங்கேற்ற கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பேரணியை தஞ்சை ஆட்சியர் கோவிந்தராவ் துவக்கிவைத்தார்.
ரயில் நிலையத்தில் தொடங்கி பழைய பேருந்துநிலையம், ஜவுளிக்கடைகள் நிறைந்த காந்திஜி சாலைவழியில் பேரணி சென்றது பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்று தற்போது குறைந்துவரும் நிலையில் தீபாவளி கூட்ட நெரிசலால் 2 வது அலை கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க மாஸ்க் அணியாமல் யாரும் வெளியே வரக்கூடாது என்றும் வர்த்தக நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்கள் மாஸ்க் அணியாமல் வந்தால் இலவசமாக மாஸ்க் வழங்க வேண்டும் என்றும் தீபாவளி பொருட்கள் வாங்க கடைக்கு எடுத்துச் செல்லும் பொதுமக்கள் வீட்டிற்குச் சென்றவுடன் குளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
நமது செய்தியாளர்
குடந்தை
ப-சரவணன்
கும்பகோணம்