கொய்யாப் பழத்தின் நன்மைகள் பொதுவாகவே பழங்கள் சத்துக்கள் நிறைந்தவை மற்றும் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவக்கூடியவை என்றே சொல்லலாம் அந்த வகையில் பொட்டாசியம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து அதிகம் கொண்டது, வைட்டமின் சி, ஏ, இ ,பி9 போன்ற சத்துக்களுடன் போலிக் அமிலம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது சத்துக்கள் நிறைந்த பழங்களில் கொய்யாப்பழம் ஒன்றாகும். இதனை பழங்களின் ராணி என்றே சொல்லலாம்l பொதுவாக கொய்யாப் பழம் சிகப்பு கொய்யா மற்றும் வெள்ளை கொய்யா என இருவகையில் கிடைக்கின்றது மேலும் கொய்யா மரத்தின் வேர், இலைகள், பட்டை போன்ற அனைத்திலும் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன என்றே கூறலாம். அதே போல் மார்க்கெட்டில் பெரிய சைசில் இருக்கும் கொய்யா பழங்கும் ஹைபிரீட் பழங்கள் ஆகும். அதனால் சிறிய வடிவில் அல்லது மீடியமாக உள்ள கொய்யாவை மட்டுமே வாங்கவேண்டும் கொய்யா11 நோய் எதிர்ப்புத் திறனை அதிகப் படுத்த வேண்டும் என்றால் நாம் தினசரி ஒரு கொய்யா சாப்பிடலாம் கொய்யாப் பழத்தில் வைட்டமின் ‘சி’ அதிக அளவில் உள்ளது என்பது முற்றிலும் உண்மை. கொய்யா பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கலுக்கு நல்லது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி