சென்னை : சென்னை உள்ளிட்ட தமிழகம் எங்கும் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகின்றனது. அதனை தொடர்ந்து, தமிழக காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளதால், ஆதரவற்றவர்கள் மற்றும் சாலையோரம் வசிக்கும் மக்கள் உணவுக்காக மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை கருத்தில் கொண்டு சென்னை பெருநகர காவல்துறை காவல்துறையினர், பல்வேறு இடங்களில் உணவு வழங்கி ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர். இன்று கொத்தவால்சாவடி போக்குவரத்து காவல்துறையினர் சார்பாக, காவல் உதவி ஆணையர் திரு.ரவிச்சந்திரன் மற்றும் காவல் போக்குவரத்து ஆய்வாளர் திரு. சோமசுந்தரம் ஆகியோர் தலைமையில் ஆதரவற்ற மாணவிகள் மற்றும் முதியோர் இல்லங்களில் வசிக்கும் முதியோர்களுக்கு உணவு மற்றும் முகக் கவசங்கள் வழங்கினார்கள். இதனை முதியோர்கள் பெற்று கொண்டு மனதார வாழ்த்தினர்.
முதியோர் இல்லத்தில் உள்ள அனைவரையும், தகுந்த சமூக இடைவெளி பின்பற்ற செய்து, அனைவருக்கும் முகக் கவசங்கள் வழங்கப்பட்டது. மேலும் கொரானாநோய் தொற்று குறித்து காவல் ஆணையர் திரு.ரவிச்சந்திரன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.சாஹித் உசேன்
மாநில தலைவர்
இளம் குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேசன் ஆப் இந்தியா