இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டத்தில் வேலூர் சரகம் காவல்துறை, இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் (IJM) , விடுவிக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர் சங்கம் மற்றும் பிற உதவி அமைப்புகள் ஒன்றாக இணைந்து வல்லகுளம் கிராமம், ஆற்காடு இராணிப்பேட்டை மாவட்டத்தில் வசிக்கும் விடுவிக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களுடன் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் அனுசரிப்பு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முனைவர் திருமதி.ஆனி விஜயா இ.கா.ப., அவர்கள் தலைமை தாங்கி, இந்நிகழ்ச்சியின் அங்கமாக உதயம் சமுதாய காவல் திட்டம் – விடுவிக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்புக்கான சமுதாய காவல் திட்டம் என்கிற திட்டத்தை துவக்கி வைத்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. திருமதி.தீபா சத்யன், இ. கா. ப., அவர்கள் மற்றும் வேலூர் மாவட்ட சிறைத்துறை காவல் கண்காணிப்பாளர் திருமதி.ருக்மணி பிரியதர்ஷினி அவர்கள் சிறப்புரை ஆற்றி விழாவை சிறப்பித்தனர். உடன் இராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பிரபு அவர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளினர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இத்திட்டத்தின் நோக்கம்:
காவல்துறை அதிகாரிகளுக்கும், விடுவிக்கப்பட்ட கொத்தடிமை மக்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைக்க தேவைப்படும் அனைத்து வழிமுறைகள் மற்றும் அவர்கள் வசிக்கும் இடத்திற்கே சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி,அவர்களுக்குத் தேவையான உதவிகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதாகும்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்