தருமபுரி: தருமபுரி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு.சி.கலைச்செல்வன் இ.கா.ப அவர்களின் தலைமையில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி மனிதனை வணிகப் பொருளாகவும் வலுக்கட்டாயமாக வேலை சுமத்தும் வழக்கங்களும், கடன் பிணையத் தொகை வழங்கி கட்டாயப் பணிக்கு வற்புறுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாக வரையறை செய்யப்பட்டுள்ளதால், கொத்தடிமை தொழிலாளர் முறை முற்றிலும் ஒலித்திடும் நோக்கத்தை கருத்திற்கொண்டு, சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்றும், கொத்தடிமைத் தொழிலாளர் முறை எந்த தொழிலில் இருந்தாலும் அதனை அடையாளம் கண்டு தக்க நடவடிக்கை எடுக்க முழு முயற்சி செய்வேன் என்றும்,
எந்த தொழிற்சாலைகளும் தொழிலாளர்களுக்கு முன்பணம் கொடுத்து பணியமர்த்தும் அதை தவிர்க்க வலியுறுத்துவேன் என்றும் கொத்தடிமை தொழிலாளர்களை மீட்டு அவர்களின் முழுமையான மறு வாழ்விற்காக பணியாற்றுவேன் என்றும் இந்திய அரசமைப்புச் சட்டம் வகை செய்துள்ள அடிப்படை உரிமைகளை அனைவருக்கும் உரித்தாக்குவதற்கு கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டத்தை சீரிய முறையில் செயல்படுத்த உறுதுணையாக இருந்து கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு சிறப்புடன் செயல்படுவேன் என்றும்.
நான் உளமார உறுதியளிக்கிறேன் என்பதைக் கூறி உறுதியளிக்கப்பட்டது இந்த நிகழ்வில் திரு.அண்ணாமலை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்களும், திரு. குணசேகரன் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு திரு. புஷ்பராஜ் சைபர் கிரைம் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்களும் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் பங்கேற்று உறுதிமொழியை ஏற்றனர்.