திருச்சி : திருச்சி மாவட்டம், துவாக்குடி காவல் நிலைய பகுதியில் சாலையில் விழுந்து கிடந்த கர்ப்பிணிப் பெண்ணை காவல் உதவி ஆய்வாளர் திரு. நாகராஜன் துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
சற்று புத்தி சுவாதீனம் அற்ற அந்த கர்ப்பிணிப் பெண் மருத்துவமனையை விட்டு வெளியே வந்து கொட்டும் மழையில் சாலையில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்ட துவாக்குடி காவல் ஆய்வாளர் திருமதி.காந்திமதி கர்ப்பிணிப் பெண்ணிடம் பேச்சுக் கொடுத்தார். காவல் உடையை பார்த்து பயந்து கத்தியதால் காவல் ஆய்வாளர் அவர்கள் தன்னார்வலர்களான சாருமதி, அனிலா மற்றும் வாழவந்தான் கோட்டை சேர்ந்த எமிலியினா ஆகியோரை போன் செய்து வரவழைத்து அந்த பெண்ணிற்கு சாப்பாடு கொடுத்து, உடைமாற்றி முதலுதவி சிகிச்சை அளித்து, அவர் கணவரின் செல்போன் நம்பரை வாங்கி கணவருக்கும் தகவல் கொடுத்து, பத்திரமாக கணவரிடம் ஒப்படைத்த காவல்துறையினர்.