அரியலூர்: வெளியூரிலிருந்து பெருநகரங்களுக்கு செல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்களை ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் நிறுத்தி வாகன ஓட்டிகளுக்கு நேற்று இரவு சோர்வை போக்க அவர்களின் முகங்களை கழுவ செய்து, சாலை விதிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தி, கொட்டும் மழையில் ஜெயங்கொண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.மோகன்தாஸ் தேநீர் வழங்கினார். நிகழ்ச்சியில் காவவ் ஆய்வாளர் திரு.தமிழரசி, காவல் உதவி ஆய்வாளர் திரு.ரமேஷ்பாபு உள்ளிட்ட போலீசார் உடன் இருந்தனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி