திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பொதுமக்கள் ரோடு மறியல் செய்தனர்.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலாப்பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனால் தொழில்களை இழந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மீண்டும் சுற்றுலாபயணிகளை அனுமதிக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கொடைக்கானலில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தாசில்தார் ஜான்சன் உட்பட பல பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.