திண்டுக்கல்; திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அண்ணாசாலையில் வீட்டு உபயோக பொருட்கள் கடை நடத்தி வருபவர் வெங்கடேஷ். வெளியூர் சென்று விட்டு, தனது காரில் கொடைக்கானல் திரும்பிக் கொண்டிருந்தார்.
நேற்று நள்ளிரவு 12 மணி அளவில், ஊத்து அருகில் அவரது காரை 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து தாக்கி, வெங்கடேஷிடமிருந்த 1 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு, கொள்ளையர்கள் தாங்கள் வந்த காரில் தப்பிச் சென்று உள்ளனர். இது குறித்து வெங்கடேஷ் அளித்த புகாரின் அடிப்படையில், தாண்டிக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்!!