சேலம் : சேலம் மேட்டூர் காவல் நிலைய சரகம் மாசிலாபாளையம் பகுதியை சேர்ந்த சார்லஸ் ராஜா (28) கடந்த 12 வருடங்களாக பெங்களூரில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வந்துள்ளார். அவர் பெங்களூரை சேர்ந்த லட்சுமி புஷ்பா ஆகிய இரு பெண்களை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார் இந்நிலையில் கடந்த (24/ 5 /2009), ஆம் தேதி பெங்களூரில் வைத்து சார்லஸ் ராஜாவை யாரோ கொலை செய்துள்ளனர் அவரது உடலை சொந்த ஊரான மேட்டூருக்கு கொண்டு வந்து அடக்கம் செய்யப்பட்டுள்ளது சார்லஸ் ராஜாவே கொலை செய்த முதல் மனைவி லட்சுமி உறவினர்தான் என இரண்டாவது மனைவி புஷ்பா என்பவர் இறந்த சார்லஸ் ராஜாவின் அம்மாவிடம் கூறியுள்ளார் இதை மனதில் வைத்துக் கொண்டு இறந்த சார்லஸ் ராஜாவின் தாயார் மேரி குளோரி (58), அவரது மருமகன் ஜான் போஸ்கோ (48) மற்றும் இரண்டாவது மனைவி புஷ்பா ஆகியோர்கள் ஒன்று சேர்ந்து மேட்டூரில் இருந்த லட்சுமி கடந்த (30/06/ 2009), ஆம் தேதி கொலை செய்யும் நோக்கத்துடன் மேட்டூர் தெர்மல் நீர் ஏற்றும் நிலையத்திற்கு அருகே அழைத்துச் சென்று அடித்து கழுத்தை நிறுத்தி கைகளையும் கால்களையும் கட்டி காவிரி ஆற்றில் ஓடும் நீரில் வீசி கொலை செய்துள்ளனர்.
இது சம்பந்தமாக மேட்டூர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு இவ்வழக்கில் விரைவாக குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்து வழக்கானது மேட்டூர் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது இதில் குற்றவாளி புஷ்பா என்பவர் தொடர்ந்து தலைமுறை வாக உள்ளார் வாழ்க்கை பிரித்து நடத்தி வந்த நிலையில் சாட்சிகளின் அடிப்படையில் அரசு வழக்கறிஞர் திரு குழந்தைவேல் அவர்களால் குற்றவாளிகள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு (06/01/ 2023), ஆம் தேதி நீதிபதி திரு. குமார் சரவணன், அவர்களால் குற்றவாளிகள் மேரி குளோரி மற்றும் ஜான் போஸ்கோ இருவருக்கும் ஆயுள் தண்டனையும் தலா 15,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கி குற்றவாளிகளை கோவை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்