கோவை : கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலைய பகுதியில் வயதான மூதாட்டி கடந்த (05.08.2022), ஆம் தேதி கை கால்களை கட்டி, வாயில் டேப் ஒட்டிய நிலையில் இறந்து கிடந்தார். இவ்வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தனிப்படை அமைத்து, தனிப்படையினரை வெவ்வேறு குழுக்களாக பிரித்து அவர்களை ஊக்கப்படுத்தி குற்றவாளிகளை கைது செய்வதற்கு வழிகாட்டியாகவும், உந்துகோளாகவும் செயல்பட்டார்.
அதன் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் குற்றவாளிகளை விரைந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்து, பொதுமக்கள் அச்சமின்றி நடமாடுவதற்கு வழிவகை செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன்,இ.கா.ப., அவர்களை சூலூர் பள்ளபாளையம் பொதுமக்கள் இன்று (09.09.2022) மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் வந்து பொன்னாடை அணிவித்து, இனிப்பு வழங்கி தங்களது நன்றிகளையும் பாராட்டுகளை தெரிவித்தனர்.