பெரம்பலூர்: முன்னாள் பாரதப்பிரதமர் அமரர் ராஜீவ்காந்தி அவர்களின் நினைவு தினமான மே. 21ஆம் நாள் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினமாக ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
அதனை முன்னிட்டு இன்று (21.05.2021) பெரம்பலூர் மாவட்டத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப. ஸ்ரீவெங்கடபிரியா அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப. ஸ்ரீவெங்கடபிரியா அவர்கள் தலைமையில் அனைத்துதுறை அலுவலர்களும், அகிம்சை, சகிப்புத்தன்மை ஆகிய நம் நாட்டின் மரபுகளில் தளராத
நம்பிக்கையுடைய இந்திய மக்களாகிய நாம், எவ்வகையான கொடுஞ்செயல்களையும், வன்முறைகளையும் முழு ஆற்றலோடு எதிர்ப்போம் என உறுதி கூறுகிறோம்.
எல்லா மக்களிடத்தும், அமைதி, சமுதாய ஒற்றுமை, நல்லுணர்வு ஆகியவற்றை போற்றி வளர்க்கவும், மக்களுடைய உயிர்களுக்கும் மற்றும் நற்பண்புகளுக்கும் ஊறு விளைவிக்கும் பிரிவினை சக்திகளை எதிர்த்துப் போராடவும்,
நாம் உறுதி கூறுகிறோம் என்று கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்றனர்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி நிஷாபார்த்திபன் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.