சென்னை : கொடுங்கையூர் காவல் நிலையத்தில் பணி புரிந்து வரும் (Level 2 IS) தலைமை காவலர் 32309 திரு.பழனிக்குமார் அவர்கள் நேற்று 20.11.2019 ம் தேதி இரவு சுமார்.11.45 மணிக்கு, P6 SM நகர் மெயின் ரோடு சென்டரல் அவின்யூ ரோடு சந்திப்பில், இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தபோது, வாகன விபத்தில் சிக்கி அகலா மரணம் அடைந்துள்ளார்.
அவருக்கு இன்று 21.11.2019 ம் தேதி பகல் 1.30 மணிக்கு வடக்கு கூடுதல் ஆணையாளர் திரு.தினகரன்,IPS அவர்கள், மேற்கு மண்டல இணை ஆணையாளர் அவர்கள், புளியாந்தோப்பு துணை ஆணையாளர் அவர்கள், வண்ணார்பேட்டை துணை ஆணையாளர் அவர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் ஆளினர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். பிரேதம் அவருடைய மனைவியின் சொந்த ஊரான மதுரை மாவட்டம் மேலவளவு கிராமத்தில் நல்லடக்கம் செய்ய கொண்டு செல்கின்றனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.