திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் அமைந்துள்ளது அருள்மிகு வடகாஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாட்கள் நடைபெறும்விழாவில் முக்கிய விழாவாக வருகின்ற 2 ஆம் தேதி கருட உற்சவமும்
5ம்தேதி பெருமாள்திருக் கல்யாண வைபவமும் 6ஆம்தேதி திரு தேரோட்டமும் நடைபெறுகிறது. விழா நடைபெறும் நாட்களில்
சிம்மவாகனம் சூர்யபிரபை வாகனம் சந்திரபிரபை வாகனம் அனுமந்த வாகனம் நாகவாகனம் யானை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பெருமாள் தினந்தோறும் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு