கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள குஞ்சிகிரி கிராமத்தை சேர்ந்த கார்த்திக் 37, என்பவர் குடும்பத்தகராறு காரணமாக தனது மனைவியை கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இந்த கொலை வழக்கு தொடர்பாக இவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள் இதைத்தொடர்ந்து தருமபுரி சிறையில் அடைப்பதற்கு போலிசார் அழைத்து வந்த போது.
சிறைக்கு வெளியே இறங்கும்போது கார்த்திக் கைவிலங்குடன் அருகே உள்ள புதருக்குள் குதித்து தப்பி ஓடினார். இதையடுத்து தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கலைச்செல்வன் அவர்களின் உத்தரவின் படி தருமபுரி நகரம், அதியமான்கோட்டை, இன்டூர் ஆகிய காவல் நிலையங்களை சேர்ந்த தனிப்படை போலீசார் மூலம் உடனடியாக தீவிர தேடுதல் வேட்டையில் தொடங்கினார்கள்.
இதையடுத்து தருமபுரி நகரக் காவல் ஆய்வாளர் திரு.சரவணன் அவர்களின் தலைமையில் தருமபுரி – ஓசூர் சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே பதுங்கி இருப்பது தெரிய வந்தது.
உடனடியாக கார்த்திக்கை சுற்றிவளைத்து போலீசார் கைது செய்து தருமபுரி நகர காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். பிறகு தருமபுரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டது.
ஓசூர் – இல் இருந்து நமது நிருபர்
A. வசந்த் குமார்