சேலம் : சேலம் மாநகர சூரமங்கலம் காவல்நிலையத்தில் பினை கையெழுத்திட்டுவிட்டு திரும்பியபோது நடந்த கொடூர சம்பவம். ராமநாதபுரம், கீழக்கரை, சின்னமாயகுளம் பகுதியை சேர்ந்தவர் எடிசன்(23). இவர் கஞ்சா போதையில் அப்பகுதியில் ரகளையில் ஈடுபட்டு வந்ததால் அதேபகுதியை சேர்ந்த கோபிநாத் மற்றும் தேவகுமார் ஆகியோரால் கடந்த 8.8.20 அன்று படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கொலையாளிகள் இருவரும் கைதுசெய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 5.11.20 அன்று, தினமும் சேலம் சூரமங்கலம் காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து 6.11.20 முதல் சேலம் சுப்ரமணிய நகர் பகுதியில் தங்கி சூரமங்கலம் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தனர். இன்று மாலை இருவரும் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டுவிட்டு அறைக்கை திரும்பி சென்று கொண்டிருந்தனர். சுப்ரமணியநகர் அருகே சென்றுகொண்டிருந்த போது 3 பேர் பயங்கர ஆயுத்த்துடன் விரட்டி வந்தனர். தேவகுமார் தப்பி காவல் நிலையத்திற்கு சென்றுவிடவே, கோபிநாத் மட்டும் சிக்கிகொண்டார். இதனையடுத்து அந்தகும்பல் நடுரோட்டில் கோபிநாத்தை சராமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிசென்றது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பிவைத்தனர். மேலும் மாநகர காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டதை அடுத்து கொலையாளிகளில் கார்த்திக், விக்னேஷ், அந்தோனி ஆகியோர் மத்திய பேருந்துநிலையம் பகுதியில் கைது செய்யப்பட்டனர். எடிசனை கொலை செய்ததற்காக பழிக்குபழி தீர்க்கவே கோபிநாத்தை கொலை செய்தது தெரியவந்துள்ளது.