பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயத்தை தயாரித்தலும் விற்றலும் சட்டப்படி குற்றமாகும். அத்தகைய குற்றத்தை புரிவோரின் மீது சட்டப்படி தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் சார்பாக பலமுறை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று 04.06.2021-ம் தேதி கைகளத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.சிக்கந்தர் பாட்ஷா அவர்கள் காவல் நிலைய காவலர்களுடன் மது வேட்டையாக புறப்பட்டு பாதாங்கி அருகே சோதனையில் ஈடுபட்டபோது. அங்கு இரு சக்கர வாகனத்தில் இருவர் நிற்பதை கண்டு அருகில் சென்று விசாரிக்க அவர்கள் தனது இரு சக்கர வாகனத்தில் 35 பாக்கெட் நாட்டு சாராயத்தை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வரவே மேற்படி கிருஷ்ணமூர்த்தி (33) மற்றும் பால்ராஜ் (31) இருவரும் பாதாங்கி கிராமம் என்பவர்களை கைது செய்து நிலையம் வந்து வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்கள்.