கோவை: கோவை சிறையில் உள்ள கஞ்சா வியாபாரிக்கு கொரோனா தொற்று உறுதியானதால்இ காவல்துறையினருக்குகொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. கோவை வீரகேரளம் பகுதியில், மூன்று நாட்களுக்கு முன் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் சக்திவேல்(45) என்பவரை வடவள்ளி காவல்துறையினர் கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
சிறையில் அடைக்கும் முன் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியான நிலையில் அவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கைதிக்கு கொரோனா தொற்று உறுதியானதால், காவல்துறையினருக்கும் பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்
நமது குடியுரிமை நிருபர்
