கோவை : கோவை (23/10/2022), -ம் தேதி அதிகாலை 4:00 மணி அளவில் கோவை மாநகரம் உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் அருகே மாருதி கார் மற்றும் கேஸ் சிலிண்டர் வெடித்து ஜமேசா முபின் என்பவர் இறந்து போன வழக்கு தொடர்பாக (27/10/2022), ஆம் தேதி தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் திரு.சைலேந்திரபாபு, அவர்கள் தலைமையில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது இக்கூட்டத்தில் கோவை மாநகர காவல் ஆணையர், மேற்கு மண்டல காவல்துறை தலைவர், தேசிய புறனாய்வு முகைமையின் துணைத் தலைவர், மற்றும் காவல் கண்காணிப்பாளர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மற்றும் கோவை மாநகர காவல் துறை ஆணையர்கள், ஆகியோர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தை தொடர்ந்து மேற்படி பி4 உக்கடம் காவல் நிலைய வழக்கில் சம்பவ இடத்தை பாதுகாத்த காவல்துறையினர் வழக்கில் தொடர்புடைய மாருதி கார் வாகனத்தின் உரிமையாளர்கள் கை மாறி இறுதியாக இறந்து போன நபர் விவரம் வரை கண்டுபிடித்து காவல்துறையினர் மற்றும் இவ்வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினர் ஆகியோர் மொத்தம் 27 பேருக்கு பாராட்டு சான்றிதழும் பண வெகுமதியும் காவல்துறை இயக்குனர் அவர்களால் வழங்கப்பட்டது .
இவ்வழக்கில் சம்பவ தினமாகிய (23/10/2022), -ம் தேதி அன்று இரவு சம்பவ இடத்திற்கு அருகில் உக்கடம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.செல்வராஜன், மற்றும் அவருடன் இருந்த திரு. தேவகுமார், காவலர் திரு. பாண்டியராஜா, ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்ததின் காரணமாக மேற்படி இறந்து போன நபர் வாகனத்தில் தொடர்ந்து செல்ல வாய்ப்பில்லாமல் போயிருக்கலாம். என்று தெரிய வருகிறது. அதன் காரணமாக மேற்படி வாகன தணிக்கையில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர் மற்றும் அவருடன் இருந்த இரண்டு காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழும் வெகுமதியும் வழங்கப்பட்டது மேற்கண்ட காவலர்கள் பெரிய அளவில் ஏற்பட இருந்த பாதிப்பை தடுக்க உதவியதற்காக வெகுமதி வழங்கப்பட்டது. மேலும் இவ்வழக்கில் காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு இறந்து போன ஜமேஷா முபின், என்பவரின் வீட்டை முறையாக முழுமையாக சோதனை இட்டு வீட்டில் இருந்த வெடிபொருட்களை கைப்பற்றியதன் வாயிலாக மேற்கொண்டு எவ்வித அசம்பாவிதமும் நிகழா வண்ணம் தடுத்துள்ளார்கள். அவர்களின் அந்த சிறப்பான பணிக்காக வெகுமதி வழங்கப்பட்டது. மேற்படி சம்பவத்தை தொடர்ந்து கோவை மாநகர காவல் துறையினர் கோவை மாநகர் முழுவதும் மேற்கொண்ட விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக சட்டம் மற்றும் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு நகரில் அமைதி நிலைநாட்டப்பட்டு வருகிறது.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்