கோவை: கடந்த 25.12.20-ம்தேதி அன்று, கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து, கேரள மாநிலம் மலப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்த காரை, மற்ற இரண்டு வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த ஒரு கும்பல்,
கோவை மாவட்டம் கே.ஜி.சாவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலக்காடு பைபாஸ் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை 4 மணி அளவில் வழிமறித்து, காரின் கண்ணாடிகளை உடைத்து, காரில் இருந்த அப்துல் சலாம் மற்றும் சம்சுதீன் ஆகிய இருவரையும் கைகளால் தாக்கி கம்பி மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி மிரட்டி காரில் வந்த அப்துல் சலாம் மற்றும் சம்சுதீனை கீழே தள்ளி காரை கடத்திச் சென்றனர்.
இது தொடர்பாக அப்துல் சலாம், கே.ஜி.சாவடி காவல் நிலையம் வந்து புகார் அளித்தார். அவரது புகாரில் அப்துல்சலாம், கேரள மாநிலத்தைச் சேர்ந்த முகமது அலி என்பவருக்கு சொந்தமான பணத்தை, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து பெற்றுக்கொண்டு கேரளா நோக்கி சென்று கொண்டிருந்ததாகவும், அப்போது மூன்று வாகனங்களில் பின் தொடர்ந்து வந்த ஒரு கும்பல் அவரது காரை வழிமறித்து, காரில் இருந்து கீழே தள்ளி விட்டு, பணத்துடன் காரை கடத்திச் சென்று விட்டதாகவும், காரில் எவ்வளவு பணம் இருந்தது என்று தங்களுக்கு தெரியாது எனவும் புகார் அளித்தார்.
இது குறித்து கே.ஜி.சாவடி காவல்நிலைய குற்ற எண் .1407/20 . 394 IPS -ன்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.உடனடியாக சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட மேற்கு மண்டல காவல்துறை தலைவர் திரு. பெரியய்யா IPS, கோவை சரக காவல்துறை துணைத்தலைவர் திரு. நரேந்திரன் நாயர் IPS, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அருளரசு IPS அவர்கள் உத்தரவிட்டதன் பேரில், பேரூர் சரக காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.சீனிவாசலு தலைமையில், மதுக்கரை காவல் ஆய்வாளர் திரு. முருகேசன் மற்றும் காவல் ஆய்வாளர் திரு. சாஸ்தா, உதவி ஆய்வாளர்கள் திரு. திருமலைசாமி மற்றும் திரு. செல்வநாயகம் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டது.
தனிப்படையினர் மூன்று பிரிவுகளாக பிரிந்து தேசிய நெடுஞ்சாலையில் நிறுவப்பட்டிருந்த ஊஊவுஏ கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தும், மொபைல் போன் சிக்னல்களை ஆய்வு செய்தும்இ உடனடியாக புலன் விசாரணையில் இறங்கினர்.
விசாரணையின் முதற்கட்டமாக கடந்த, 26.12.20 ம்தேதி கடத்திச் செல்லப்பட்ட கார், கோவை பேரூர் சிறுவாணி மெயின் ரோட்டில் தனியாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்த தனிப்படையினர் அதே நாள் காரை ரெக்கவரி வாகனம் மூலம் கே.ஜி சாவடி காவல் நிலையம் கொண்டு வந்து சோதனையிட்டதில் மேற்படி வாகனத்தின் டிக்கியின் உள்ளே பம்பரின் உட்புறம் இருந்த ரகசிய அறையில் இருந்து 90 லட்சம் ரூபாய் கைப்பற்றினர்.
வழக்கின் அடுத்த கட்டமாக, 09.01.2021 அன்று வழக்கில் தொடர்புடைய உன்னி குமார் என்கிற ராஜு (வயது 44) மதுக்கரையில் வைத்து கைது செய்து, குற்றவாளியிடம் இருந்து பணம் ஒரு லட்சத்தி 50 ஆயிரத்தை கைப்பற்றினர்.
உன்னி குமார் கொடுத்த தகவலின் பேரில் கேரள மாநிலம், திருச்சூரைச்சேர்ந்த இவ்வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபர் ஸ்ரீஜித் என்பவரை நேற்று முன்தினம் கைது செய்த தனிப்படையினர் அவனிடம் மேற்கொண்ட புலன் விசாரணையில், வழக்கின் மிகமுக்கிய நபரான கேரள மாநிலம் முண்டூரை சேர்ந்த சந்தோஷ் (34), திருச்சூரை சேர்ந்த சுபின் (29), கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த சந்தீப் (32) மற்றும் கேரளா மாநிலம் பாலக்காடு என்ற இடத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (47) ஆகிய நான்கு பேரை கே.ஜி சாவடி எல்லைக்குட்பட்ட குமுட்டிபதி என்ற இடத்தில் நேற்று 10.01.21ம்தேதி கைது செய்து சந்தோஷ் என்பவரிடம் இருந்து ரூபாய் 3 லட்சத்து 27 ஆயிரம் ரூபாயும், சுபின் என்பவரிடம் இருந்து காரையும், சந்தீப் இடம் இருந்து வெள்ளை நிற இன்நோவா காரையும், மற்றொரு குற்றவாளியான ராதாகிருஷ்ணன் என்பவரிடம் இருந்து ரூபாய் ஒரு லட்சம் பணத்தையும், பொலிரோ பிக்கப் வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் நேற்று நீதிபதி திருமதி. திலகேஸ்வரி அவர்கள் முன் ஆஜர்படுத்தி நீதி மன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்