திண்டுக்கல் : திண்டுக்கல் வேடசந்தூர், சாலையூர் நால்ரோடு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் கடந்த 24-ம் தேதி கம்ப்யூட்டர், CPU, லேப்டாப், பிரிண்டர், கேமரா, ப்ரொஜெக்டர் உள்ளிட்டவைகள் திருடு போனது குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் ஒட்டன்சத்திரம், கன்னிவாடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளிலும் கம்ப்யூட்டர், லேப்டாப், ப்ரொஜெக்டர் உள்ளிட்ட பொருட்கள் திருடு போனது குறித்து அந்தந்த காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது குறித்து S.P.பிரதீப் உத்தரவின் பேரில் வேடசந்தூர் DSP.பவித்ரா மேற்பார்வையில் வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் வேலாயுதம் தலைமையிலான போலீசார் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட A.வெள்ளோடு, கரடிபட்டியை சேர்ந்த ஜான்கென்னடி சுந்தர்ராஜ் மகன் பிரான்சிஸ்பிரவீன்(29). என்பவரை கைது செய்து அவரிடமிருந்து கம்ப்யூட்டர்,லேப்டாப், ப்ரொஜெக்டர், கேமரா , பிரிண்டர், கார் ஆகியவை பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா