அரியலூர் : அரியலூர் மாவட்டம் திருமானூர் ஊராட்சி அலுவலகத்தில் கிராம வார்டு உறுப்பினர்களுக்கான சிறப்பு பயிற்சி 20.11.2020 இன்று திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் Z.ஆனி விஜயா இ.கா.ப அவர்களின் உத்தரவின் படி, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் மேற்பார்வையில் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் திருமதி.சுமதி மற்றும் த.கா கிருஷ்ணமூர்த்தி,ஜெகதம்பாள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி.ஜெயகுமாரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திரு. ஆனந்தன் ஆகியோர் இணைந்து ”கேடயம் (SHIELD)” திட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் கொரோனா பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள், பாலியல் குற்றங்களை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் மற்றும் வெர்ச்சுவல் காப் பற்றியும் கிராம வார்டு உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர் . மேலும் கேடயம் (SHIELD) திட்டம், VIRTUAL COP தொடர்பாக விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியின் முடிவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க திருச்சி சரக காவல்துறையின் கேடயம்(SHIELD) திட்டத்தின் உதவி எண்கள் 6383071800, 9384501999 மற்றும் VIRTUAL COP பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.