தஞ்சை : தஞ்சை மாவட்டம், கும்பகோணம் ஹாஜியார் தெருவில், மருந்து கடை நடத்தி வந்தவர் முகமது பஷீர்(48), கோவையில் போதை மருந்து சாப்பிட்ட மாணவர் ஒருவர் இறந்தது தொடர்பான வழக்கில் கடந்த மாதம் 18-ந் தேதி கோவை தனிப்படை காவல்துறைனரால் முகமது பஷீர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கோவையில் போதை மருந்து சாப்பிட்டு இறந்து போன மாணவருக்கு முகமதுபஷீர் மருந்துக் கடையில் இருந்து கூரியர் மூலம் போதை மாத்திரை அனுப்பி வைத்தது தெரிய வந்தது. தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். போராட்டம் அறிவிப்பு இந்த நிலையில் முகமது பஷீர் நடத்தி வந்த மருந்து கடையில் இருந்து போதை மருந்து அனுப்பியதற்கான ஆதாரம் இருந்தும் ஏன் அந்த மருந்துக்கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் குருமூர்த்தி மாநில அரசின் சுகாதாரத் துறை உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பினார்.
மேலும் சம்பந்தப்பட்ட மருந்துக்கடையை சீல் வைக்க தவறினால் இன்று(செவ்வாய்க்கிழமை) இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் அந்த மருந்து கடையின் எதிரே போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்திருந்தார். மருந்து கடைக்கு `சீல்’ இந்த நிலையில் நேற்று மதியம் கும்பகோணம் வந்த மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் மலர்விழி மற்றும் கும்பகோணம் துணை காவல் சூப்பிரண்டு திரு. அசோகன், காவல் ஆய்வாளர் திருமதி. பேபி, ஆகியோர் முகமதுபஷீர் நடத்தி வந்த மருந்து கடைக்கு பூட்டு போட்டு `சீல்’ வைத்தனர். இந்த சம்பவத்தால் கும்பகோணத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்