விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தொம்பக்குளம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (45), அதே ஊரை சேர்ந்தவர் வெங்கடேஷ் பாபு (43), இவர்கள் 2 பேரும் கூலி தொழிலாளிகள். 2 ஆண்டுகளுக்கு முன்பு (10), வயது சிறுமியை கடத்தி சென்று இருவரும் கூட்டாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதுகுறித்து ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவக்குமார், வெங்கடேஷ் பாபு ஆகிய 2 பேரையும் கைது செயதனர்.
இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி பூர்ண ஜெயஆனந்த் விசாரித்து, சிவக்குமார், வெங்கடேஷ் பாபு ஆகிய இருவருக்கும் சாகும் வரை சிறை தண்டனையும், தலா ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அபராதமும் விதித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரணமாக தமிழக அரசு ரூ.7 லட்சம் வழங்கவும் நீதிபதி பரிந்துரை செய்தார்.