விருதுநகர் : விருதுநகர் அருப்புக்கோட்டையில் கூட்டு பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட சீனிவாசன், ஜெயக்குமார், ராம்குமார், பிரபாகரன் என்ற போராளி, விஜய் ஆகிய 5 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு மனோகர், பரிந்துரை செய்ததின்பேரில் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் மேகநாத ரெட்டி உத்தரவிட்டார். அதன் பேரில் 5 பேரையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.