சேலம் : சேலம் ஆத்தூர் உட்கோட்டம் ஆத்தூர் நகர காவல் நிலைய பகுதி சேர்ந்த கோபால் என்பவர் புது காலனி முல்லை வாடி பகுதியில் குடியிருந்து கொண்டு காந்திநகர் எல்.ஆர். சி ஓனர் வீட்டில் வாட்ச்மேன் வேலை செய்து வருவதாகவும் (25/4/2011)-ம் தேதி இரவு தந்தைக்கு சாப்பாடு கொடுக்க வந்த சிறுமியின் தங்கையை அழைத்து வர திரும்பி தனியாக வந்தபோது முல்லைவாடி ஆத்தூர் பகுதி சேர்ந்த ராமச்சந்திரன் (31) அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (31) ஆகியவர்கள் சிறுமியை வழிமறித்து வாயில் துணியை வைத்து அடைத்து உப்பு ஓடை பாலத்திற்கு அருகே கடத்திச் சென்று கூட்டு பாதையில் துன்புறுத்தல் செய்த குற்றத்திற்காக ஆத்தூர் காவல் நிலையத்தில் ipc ஆக்டிங் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை (26/4/2011) அன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இவ்வழக்கில் விரைவாக ஆத்தூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் திரு.முரளி அவர்களால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த விசாரணையில் இருந்து வந்த நிலையில் (21/4/2023), ஆம் தேதி சாட்சிகள் அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகள் பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றத்திற்காக சேலம் அகிலா நீதிமன்ற நீதிபதி அவர்களால் இருவருக்கும் ஆயுள் தண்டனையும் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கி குற்றவாளிகளை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு வழக்கறிஞர் திருமதி.பத்மா அவர்கள் சிறப்பாக வாதாடி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர உதவியாக இருந்தார். தற்போதைய விசாரணை அதிகாரியான திரு.செந்தில்குமார் ஆத்தூர் நகர காவல் நிலையம் அவர்களை சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சிவகுமார் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்