சேலம் : சேலம் மாவட்டம், சின்னையாபுரம் தாசநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த கோபிநாதன் (28) என்பவரிடம் அதே பகுதியை சேர்ந்த அய்யனார் (42), அவரின் மனைவி கலையரசி (35), என்பவர் கடந்த 2013 ஆம் ஆண்டு கூட்டுறவு துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி 8 லட்சத்து 50 ஆயிரம் பெற்றுக் கொண்டு மோசடி செய்த குற்றத்திற்காக (23 /7/2015) ஆம் தேதி சேலம் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் கொடுத்த நிலையில் மாவட்ட குற்றப்பிரிவு குற்ற எண் 11/ 2015 109, 420, 506, ன் படி அப்போதைய காவல் உதவி ஆய்வாளர் திருமதி.நல்லம்மாள் மாவட்ட குற்றப்பிரிவு அவர்களால், மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு இவ்வழக்கில் விரைவாக குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்து வழக்கானது சேலம் சார்பு நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டு (17/7/ 2023) ஆம் தேதி சேலம் சார்பு நீதிமன்ற நீதிபதி திரு.கமலக்கண்ணன் அவர்களால், மேற்கண்ட குற்றவாளிகள் அய்யனார் , கலையரசி ஆகிய இருவருக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா. 5000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் அரசு வழக்கறிஞர் அவர்கள் வழக்கில் சிறப்பாக வாதாடி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தர உதவியாக இருந்தார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்