தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பயிற்சிக்காக வந்த வடமாநில இளம்பெண் ஒருவர் நான்கு இளைஞர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் நான்கு பேருக்கும், சாகும்வரை சிறைத் தண்டனை விதித்து தஞ்சாவூர் மகளிர் விரைவு நீதிமன்றம் 13 ந்தேதி பரபரப்பான தீர்ப்பை வழங்கியது.
கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்குள் வழக்கு விசாரணையில் துரிதமாகச் செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்துள்ளதால், இதில் பங்கெடுத்த போலீஸாரை அனைத்து தரப்பு மக்களும் மனதாரப் பாராட்டி வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் வங்கியின் டெல்லி கிளையில் வேலை கிடைத்தது. இது தொடர்பான பயிற்சிக்காக கும்பகோணம் வந்த அந்த இளம்பெண்ணை நான்கு இளைஞர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.
குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைப்பதில் முக்கியப் பங்காற்றியவர், இன்ஸ்பெக்டர் திரு.ரமேஷ்குமார். அவர் கூறியதாவது பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்த உடனேயே அவனுகளை சும்மா விடக் கூடாது என்ற நினைப்பு மட்டுமே மனதில் இருந்தது. இந்த வழக்கில் குற்றவாளிகளை உடனே கைது செய்துவிட்டோம்.
பின்னர் அந்தப் பெண் வாக்குமூலம் தந்ததுடன் ஆட்டோ டிரைவர் உட்பட 5 பேரையும் அடையாளம் காட்டினார். இதைத் தொடர்ந்து அறிவியல்ரீதியாக செயல்பட்டு குற்றத்துக்கான தடயங்களைக் கண்டுபிடித்தோம். மேலும், இது தொடர்பாக 33 சாட்சிகளிடம் விசாரணை செய்ததுடன் 68 தடயங்களுடன் சுமார் 700 பக்கத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தோம்.
இந்த வழக்கில் குற்றவாளிகளுக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டபோது மற்றொரு வழக்குக்காக வந்த குற்றவாளி ஒருவன் கதறி அழுதுவிட்டான். இது குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டும். இந்த நிலையில், சுமார் 300 நாள்களுக்கு மேலாக தஞ்சாவூர் மகளிர் நீதிமன்றத்தில் இதன் விசாரணை நடைபெற்றது. குற்றவாளிகள் பயன்படுத்திய செல்போன், சிம்கார்டு, ஆட்டோ உள்ளிட்ட 18 தடயங்களைத் துல்லியமாகக் கண்டறிந்து விசாரணை செய்து அறிக்கையைத் தாக்கல் செய்தோம்.
குற்றவாளிகள் எங்களுக்கு வாழவேண்டிய சின்ன வயசு. அதனால் தண்டனையைக் குறைத்துக் கொடுங்க என்றனர். ஆனாலும் இந்த வழக்கில் நாங்கள் எதிர்பார்த்தபடி மிகப்பெரிய தண்டனையை நீதிமன்றம் வழங்கியுள்ளது.
இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் பாலியல் செயலில் ஈடுபடும்போது அதை ஒரு வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டினால் அந்தப் பெண் பயந்துகொண்டு வெளியே சொல்ல மாட்டாள் என்ற எண்ணம் இதில் ஈடுபடும் நபர்களுக்கு உள்ளது.
ஆனால், பாதிக்கப்பட்ட பெண் தைரியமாக வெளியே வந்து புகார் கொடுத்து சாட்சியும் சொல்லியிருக்கிறார். அவர் குறித்த எந்தத் தகவலும் இதுவரை வெளியில் தெரியாதவகையிலும் மீடியாவில் வராதபடியும் நாங்கள் பார்த்துக்கொண்டோம். அந்தப் பெண்தான் இந்த வழக்கின் வெற்றிக்கு முதல் காரணம்.
இந்த வழக்கில் குற்றவாளிகளுக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டபோது மற்றொரு வழக்குக்காக வந்த குற்றவாளி ஒருவன் கதறி அழுதுவிட்டான். இது குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டும். இந்த வழக்கு சீக்கிரம் முடிவதற்கு உயர் அதிகாரிகள் பெரும் ஒத்துழைப்பைக் கொடுத்தனர். பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக புகார் கொடுத்தால் எந்தக் குற்றவாளியும் தப்பிக்க முடியாது என்பதற்கு இந்த வழக்கே சாட்சி” என்றார் உறுதியான குரலில்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்