திருவாரூர்: திருத்துறைப்பூண்டி காவல் சரகம் மன்னை சாலையில் வீட்டின் உள்ளே புகுந்து கத்தியை காட்டி மிரட்டி, கொள்ளையடிக்க முயன்ற – 1) சரவணன் (44). த/பெ. பெரியசாமி, சிலான்கோ, மலேசியா. 2) இளவரசன் (26). த/பெ. பரமசிவம், சிலான்கோ, மலேசியா. 3) கோபி (35). த/பெ. லோகநாதன், சிலான்கோ, மலேசியா. 4) விமலன் (19). த/பெ. காளிதாசன், சிலான்கோ, மலேசியா ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிறப்பாக செயல்பட்டு எதிரிகளை கைது செய்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்கள். மேலும் கொலை, கொள்ளை, அடிதடி மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கருண் கரட், இ.கா.ப., அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.