மதுரை: ஜெய்ஹிந்துபுரம் (ச&ஒ) காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு.விஜய் ஆனந்த் அவர்கள் ரோந்து பணியில் இருந்தபோது பாரதியார் ரோடு கடைசியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த ஆறு நபர்களிடம் விசாரணை செய்தபோது அவர்கள் சரவணக்குமார், மணிகண்டன், ராமசுப்ரமணியன், விக்னேஷ், காளிமுத்து, மணிகண்டன் என தெரியவந்தது. ஆகவே அவர்களை சோதனை செய்தபோது அவர்களிடம் மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்ககூடிய கத்திகள், அருவாள்கள், உருட்டுக்கட்டை, மிளகாய்பொடி பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஜெய்ஹிந்துபுரம் காவல் ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்கள் ஆறு நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரணை செய்த போது ஆறு நபர்களும் சேர்ந்து ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் கூட்டாக சேர்ந்து கொள்ளையடிக்க திட்டமிட்டுக்கொண்டு இருந்ததாக ஒப்புக்கொண்டனர்.ஆகவே ஆறு நபர்களையும் நேற்று16.05.2020- ம் தேதி நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
















