தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் அவர்கள் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது, திருவண்ணாமலை மாவட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்பியாக இருந்ததிரு.சவுந்தரராஜன் அவர்கள் நீலகிரி மாவட்ட தலைமையிட கூடுதல் எஸ்பியாகவும் நீலகிரி மாவட்ட தலைமையிட கூடுதல் எஸ்பியாக இருந்ததிரு. தங்கவேல் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் எஸ்பியாகவும் கரூர் மாவட்ட தலைமையிட கூடுதல் எஸ்பியாக இருந்ததிரு.பிரேமானந்தன் அவர்கள் கோவை மாவட்ட தலைமையிட கூடுதல் எஸ்பியாகவும் கள்ளக்குறிச்சி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்பியாக இருந்ததிரு.மணிகண்டன்அவர்கள் நீலகிரி மாவட்ட சைபர் கிரைம்
பிரிவு கூடுதல் எஸ்பியாகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி