பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.பாண்டியன், (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தடுப்பு பிரிவு) அவரது மேற்பார்வையில், ஆட்கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திரு.சி.சுப்ரமணியன் அவரது குழுவினரான
திரு.ஜான், சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர்கள் திரு.மருதமுத்து மற்றும் திருமதி.சுகன்யா ஆகியோர்கள் பெரம்பலூர் மாவட்ட தொழிலாளர் ஆய்வாளர் திருமதி.சாந்தி, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் திருமதி.சித்ரா, சைல்ட் லைன் திருமதி.பட்டு ஆகியோர்களுடன் இணைந்து பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இவற்றில் பெரம்பலூர் நகரில் 6 குழந்தை தொழிலாளர்களை மீட்டு அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மேற்படி 6 நபர்களை சைல்ட் லைன் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் உங்கள் பகுதியில் ஏதேனும் குழந்தை தொழிலாளர்களை கண்டால் 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவியுங்கள். இரகசியம் காக்கப்படும் என்பதை உறுதியாக கூறுகிறோம்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை