பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.பாண்டியன் அவர்களின் மேற்பார்வையில் இன்று 10.02.2022-ம் தேதி பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு மற்றும் கொத்தடிமைகள் முறை ஒழிப்பு குறித்து தீவிரமாக சோதனையிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இன்று சிறப்பு சோதையிட்டதில் பெரம்பலூர் நகரில் குழந்தை தொழிலாளியாக பணிபுரிந்து வந்த சிறுவனை மீட்டும் பின்னர் பெரம்பலூர் நகரில் பிச்சை எடுத்து கொண்டிருந்த சிறுவனை மீட்டு பெரம்பலூர் குழந்தைகள் நல அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை.