கோவை: கோவை தெலுங்குபாளையம் ராஜேஸ்வரி நகரில் உள்ள 2 ஸ்வீட்ஸ் கடைகளில் நேற்று தேசிய குழந்தை தொழிலாளர் அதிகாரி திரு.பிஜு அலெக்ஸ் திடீர் சோதனை நடத்தினர் .அப்போது அங்கு 9 வயது 15 வயது சிறுவர்கள் வேலைக்கு இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக தெலுங்குபாளையம் குமாரபாளையத்தை சேர்ந்த ஸ்வீட் கடை உரிமையாளர் தவசியப்பன் அடைக்கலம் 33. சொக்கம் புதூர்கண்ணன் 41 ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர் .இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர்இவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்