பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று 17.11.2020-ம் தேதி பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையத்திற்கும் புகார் கொடுக்க வரும் பொது மக்களின் குழந்தைகள் மற்றும் குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளை விசாரணை செய்வதற்காக ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஒருவரை குழந்தை நல அலுவலராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப அவர்கள் நியமணம் செய்தார். மேற்படி நபர்களுக்கு குழந்தைகளிடம் எவ்வாறு நடந்து கொள்வது பற்றி எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. நீதிராஜ், சமூக நல அலுவலர் திருமதி.ரூபா, மாவட்ட குழந்தைகள் நல பிரிவு வழக்கறிஞர் திரு.கோபிநாத், இந்தோ டிரஸ்ட் அரக்கட்டளை சார்பாக திருமதி.கீதா, காவல் ஆ்யவாளர் திருமதி.கார்திகேயனி, காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.