தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரம் காவல் சரகத்தில் பிறந்து 11 மாதங்கள் ஆன குழந்தையை கடத்திய கும்பலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுப்படி தனிப்படை அமைத்து குழந்தையை நல்ல முறையில் மீட்டெடுத்து, குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனை பாராட்டி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.V.பாலகிருஷ்ணன் இ.கா.ப., அவர்கள் மற்றும் தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.பிரவேஷ்குமார்,இ.கா.ப., அவர்கள் சேர்ந்து பணவெகுமதியடன் கூடிய பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.