தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் தேனாம்படுகை கிராமத்தில் வசித்து வரும் ஆனந் ,நாகம்மா தம்பதியினரின் பிறந்து 11 மாதமே ஆன முகம்மது சுலைமான் எனும் பெயருடைய ஆண் குழந்தை கடந்த 15.10.21 ம் தேதி இரவு முதல் காணவில்லை என்று பட்டிஸ்வரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனையொட்டி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி. ரவளி பிரியாகாந்த புனேனி IPS அவர்களின் உத்தரவு படி, கும்பகோணம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. அசோகன் அவர்களின் மேற்பார்வையில் கும்பகோணம் தனிப்படை உதவி ஆய்வாளர் கீர்த்தி வாசன் தலைமையில் தனிப்படை போலிஸார்கள்
உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் .ராஜா, சுந்தர்ராஜன், தலைமை காவலர்கள் பாலு, நாடிமுத்து, ஜனார்த்தனன், கவிதா, சங்கீதா ஆகியோர் பல கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டார்கள்.
இதில் குழந்தை முகமது சுலைமான் கடத்தப் பட்டிருப்பது தெரிய வந்தது.
அதனை தொடர்ந்து கும்பகோணம் தனிப்படை போலீசார் கடந்த 6 நாட்களாக மதுரை, திருப்பத்தூர், திருப்பரங்குன்றம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய இடங்களில் தீவிர தேடுதல் வேட்டையை மேற்கொண்டு வந்த நிலையில் கடத்தப்பட்ட குழந்தை நாகர்கோவில் பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து குழந்தையை கடத்திய நாகர்கோவிலிலை சேர்ந்த மைக்கேல் மற்றும் மதுரையை சேர்ந்த ஆறுமுகம் ஆகிய இருவரையும் கும்பகோணம் தனிப்படை போலீசார் இன்று கைது செய்து மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். குழந்தையை மீட்ட தனிப்படை போலீசாரை இப்பகுதி பொது மக்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் பாராட்டினர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்