தருமபுரி: தருமபுரி சைபர் க்ரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.புஷ்பராஜ் , அரூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திருமதி.பெனசிர் பாத்திமா , சைபர் க்ரைம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி.சரண்யா ஆகியோர் அடங்கிய குழு பங்கேற்று 181 மகளிர் உதவி மையம் , 1098 குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண் , மற்றும் தேசிய உதவி எண் 14477 பயன்பாடுகள் பற்றி எடுத்துரைத்து மாணவிகள் தங்களது பிரச்சினைகளை மனம் திறந்து பேசவேண்டும் மற்றும் உரிமைகளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும் இதைத்தொடர்ந்து சமீப காலமாக ஆன்லைன் வகுப்புகளுக்கு மாணவிகள் செல்போன் பயன்படுத்துவது வழக்கமாகிவிட்டது இந்நிலையில் சமூக வலைதளங்களில் நேரத்தை செலவழிப்பது அதிகமாக உள்ளது ஆனால் இணையத்தில் இருக்கும் ஆபத்து உணராமல் விழிப்புணர்வு இன்றி வரும் மாணவிகளுக்கு சமூக வலைதளங்களில் போட்டோக்கள் மற்றும் தனிப்பட்ட விவரங்களை பதிவிட வேண்டாம்.
பெண்கள் முகம் தெரியாத நபரிடம் ஆன்லைனில் பழகுவதை தவிர்க்க வேண்டும் அதேபோல் முகம் தெரியாத நபரிடம் இருந்து வரும் வீடியோ அழைப்புகளை தவிர்ப்பது நல்லது.
இணைய குற்றவாளிகள் போட்டோக்களை மார்பிங் செய்து மிரட்டி பணம் பறிக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றனர் எனவே மாணவிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் இதுபோன்ற பிரச்சனைகளை சந்திக்கும் போது மனம் தளராமல் தைரியமாக சைபர் கிரைம் காவல் நிலையத்தை அணுகவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
தர்மபுரியில் இருந்து நமது நிருபர்
க.மோகன்தாஸ்.