கரூர்: கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் படி 14.10.2021 இன்று தென்னிலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. கண்ணதாசன் அவர்கள் தலைமையில் தொட்டம்பட்டி கிராமத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றங்கள் பற்றியும், சந்தேகநபர்கள் யாரும் வந்தால் உடனே காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வலியுறுத்தியும் கிராம விழிப்புணர்வு செய்யப்பட்டது.















