பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.பாண்டியன் மற்றும் அவரது குழுவினரான திருமதி.விஜயலெட்சுமி சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.மருதமுத்து One Step Center உறுப்பினர் திருமதி.கீதா ஆகியோர்கள் இணைந்து இன்று பெரம்பலூர் மாவட்டம் ஆருத்ரா வித்யாலயா மேல் நிலை பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், ஒவ்வொரு காவல் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மையம் இலவச தொலைப்பேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்காக செயல்படும் இலவச உதவி எண் 14417 குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக பெரம்பலூர் மாவட்ட காவல்துறை.