சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து பெண் காவல் ஆய்வாளர்கள் மற்றும் பெண் சார்பு ஆய்வாளர்கள் மற்றும் அனைத்து காவல் நிலையங்களிலும் உள்ள குழந்தைகள் நல காவலர்கள், மகிலா நீதிமன்ற காவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இப்பயிற்சி முகாமில் 1) மாண்புமிகு திருமதி.M.சுமதி சாய்பிரியா, முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி, சிவகங்கை. 2) மாண்புமிகு திரு.ஏ.கே.பாபுலால், கூடுதல் அமர்வு நீதிபதி, மகிளா நீதிமன்றம், 3) மாண்புமிகு திரு.G.சுதாகர்,
தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர், 4) மாண்புமிகு. திரு.இனியா கருணாகரன், சிறார் நீதிக் குழுமம், 5) திருமதி.பி. சரளா கணேஷ், தலைவர் குழந்தைகள் நலக்குழு மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோர் கலந்துகொண்டு தனித்தனியாக வகுப்புகள் எடுத்தும் பயிற்சி அளித்தனர்.
புலன் விசாரணை அதிகாரிக்கு புலன் விசாரணை நுணுக்கங்களையும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், சட்டத்தால் முரண்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பாதிக்கப்பட்டவர்களை கையாளக்கூடிய நடைமுறைகள் பற்றியும் பயிற்சி அளித்தனர்.
இப்பயிற்சி முகாமில் குழந்தைகள் நலக்குழு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு மற்றும் சிறார் உதவி மையம் ஆகிய அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் த. செந்தில்குமார் அவர்கள் கலந்துகொண்டு இப்பயிற்சியின் நோக்கம் மற்றும் பயிற்சியின் அவசியத்தை எடுத்துரைத்தும் சிவகங்கை மாவட்டத்தில் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை ஒரு சமூக குற்றமாக பாவித்து விரைவான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுத்தும், சிவகங்கை மாவட்டத்தில் குழந்தைகள் ஆரோக்கியமான சூழலில் வாழ்வதற்கான சூழ்நிலையை உருவாக்கவும், இப்பயிற்சி முகாமில் கொண்டவர்களை உற்சாகப்படுத்தினார்கள்.
கூடுதல் காவல் கண்காணிப்பாளர், குழந்தைகள் நல குழு மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்