போத்தனூர் காவல் நிலையம் சார்பில் 2026 ஆம் ஆண்டு பொங்கல் திருவிழாவை சிறப்பாக கொண்டாட முடிவெடுக்கப்பட்டு இந்த பொங்கல் ஆதரவற்ற குழந்தைகளுக்கு என்றும் போத்தனூர் காவல்துறை ஆதரவாக இருக்கும் என்பதை பொதுமக்களுக்கு நினைவூட்டும் விதத்திலும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இதனை முன்னிட்டு கோவை மாவட்டம் வெள்ளலூர் ரோட்டில் அமைந்துள்ள குழந்தைகள் குடும்பம் Family for children’s இல்லத்தில் பொங்கல் திருவிழாவானது மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. இதில் போத்தனூர் சரக உதவி ஆணையாளர் கனக சபாபதி, குழந்தைகள் குடும்பம் இல்ல தலைவர் சின்ராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
இந்த பொங்கல் திருவிழாவில் காலை 11 மணியளவில் பொங்கல் வைக்கப்பட்டு பின்னர் அங்குள்ள குழந்தைகளுக்கு பொங்கல் விளையாட்டு போட்டிகள் ஆன கயிறு இழுத்தல் ,மியூசிக்கல் சேர் ,சாக்குஓட்ட போட்டி, லெமன் ஸ்பூன் ஓட்டம். பாட்டு போட்டி ஓட்டப்போட்டி கவிதை வாசிப்பு. போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு புத்தகங்கள் பரிசு பொருட்கள் மற்றும் பங்கெடுத்த அத்தனை குழந்தைகளுக்கும் நீதிக் கதைகள் தெனாலிராமன் கதைகள் டிஸ்னரி தலைவர்கள் வரலாறு திருக்குறள் மற்றும் பயனுள்ள புத்தகங்கள் வழங்கப்பட்டது. மதியம் 12:30 மணியளவில் குழந்தைகள் குடும்பத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் மதிய உணவு பரிமாறப்பட்டு குழந்தைகளுடன் இணைந்து போத்தனூர் காவல்துறை அனைவரும் சாப்பிட்டனர்.

இந்த பொங்கல் விழா விழாவானது சீரும் சிறப்புமாக போத்தனூர் காவல் ஆய்வாளர் அசோக் குமார் மற்றும் காவல்துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்வில் சுந்தராபுரம் காவல் ஆய்வாளர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் மற்றும் போத்தனூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் புலனாய்வு பிரிவு சார்பு ஆய்வாளர்கள் மற்றும் போத்தனூர் காவல் நிலைய அனைத்து ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்
















