கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மோகன்ராஜ் அவர்கள், தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் திருநாவலூர், அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 50 பெண் குழந்தைகளை அழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது, அப்போது பொதுவெளியிலோ குடும்பத்திலோ அல்லது பள்ளியிலோ ஏற்படகூடிய பாலியல் தொந்தரவு குறித்தும் அதுபோன்று பிரச்சனைகள் ஏற்படாமல் தங்களை தற்காத்துக்கொள்வது குறித்தும் ஏதேனும் பாலியல் தொந்தரவு ஏற்பட்டால் காவல்துறையினரை எவ்வாறு அணுகுவது குறித்தும் விழப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
காவல்துறையினர் பயன்படுத்தும் ஆயுதங்கள் மற்றும் கோப்புகள் ஒவ்வொருநாளும் காவல்துறை இயங்கும் விதம் குறித்து அறிந்துகொள்ளும் வகையில் குழந்தைகளுக்கு விளக்கப்பட்டது. பெண் குழந்தைகள் ஒவ்வொருவரிடமும் பெண் காவல்துறையினர், சமூக நலதுறையினர், குழந்தைகள் பாதுகாப்பு துறையினரைக் கொண்டு குழந்தைகளுக்கு ஏதேனும் பொதுவெளியிலோ அல்லது பள்ளிகளிலோ ஏதேனும் பாலியல் தொந்தரவு உள்ளதா என்பதை கேட்டறிந்தனர். இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.மணிகண்டன், காவல் ஆய்வாளர்கள், பெண் உதவி ஆய்வாளர்கள், பெண் காவலர்கள், சமூக நலதுறையினர், குழந்தைகள் பாதுகாப்பு துறையினர், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் பலர் கலந்துகொண்டனர்.