திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகேயுள்ள குரும்பபட்டியில், சர்வதேச குழந்தைகள் தினம் மற்றும் குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு, காவல்துறை மற்றும் தமிழ்நாடு அலையன்ஸ் இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திண்டுக்கல் சரக டிஐஜி M.S.முத்துசாமி “கனவை கலைப்பதேன்” என்ற குழந்தைத் திருமண விழிப்புணர்வு பாடலையும், “நம்ம பாதுகாப்பு நம்ம கையில” என்ற குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் குறும்படத்தையும் வெளியிட்டார். மேலும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த குழந்தைகள் தங்கள் பாதுகாப்பு சார்ந்த பிரச்சனைகளை காவல்துறையிடம் புகார் கூற 94875 93100
என்ற சிறப்பு எண்ணையும் அறிமுகப்படுத்தினார். இவ்விழாவில் பேசிய அவர், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் தினமும் நேரம் செலவழித்து மனம் விட்டு பேசும் சூழலை உருவாக்க வேண்டும். கிராமத்தில் அனைவரும் இணைந்து குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். குழந்தைத் திருமணம், பாலியல் ரீதியான துன்புறுத்தல் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுக்க, பெற்றோர்கள் முன்வந்து காவல் நிலையங்களில் புகார் கொடுக்கவும், குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை கற்றுக் கொடுக்கும்படியும் அறிவுரை கூறினார். விழாவில் .T.வெள்ளைசாமி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு), S.வினோத், துணை காவல் கண்காணிப்பாளர், திண்டுக்கல், மாவட்ட சமூக நல அலுவலர் G.புஷ்பகலா, முருகேஸ்வரி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள். அமைதி அறக்கட்டளையின் தலைவர் ரூபபாலன், சைல்டு வாய்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த அண்ணாதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர். இவ் விழாவை தமிழ்நாடு அலையன்ஸ் மற்றும் ஃப்ரீடம் பண்ட் அமைப்பைச் சேர்ந்த முனைவர் P.பாலமுருகன், தொகுத்து வழங்கினார். அமைதி அறக்கட்டளையின் இணை இயக்குனர் ஹெலன் வரவேற்புரை வழங்கினார். இறுதியாக சிபிஜா பென்சிகர் நன்றியுரை வழங்கினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா