இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பள்ளிகளில் மாணவ/மாணவிகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தடுப்பு பற்றியும், போதைப் பொருட்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பற்றியும், போக்குவரத்து விழிப்புணர்வு பற்றியும் பெண்களுக்கான உதவி எண்-181 குழந்தைகளுக்கான உதவி எண்-1098 பற்றியும் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.